Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய சவேரியார் 1163-இறைமணம் பரப்பிய  


இறைமணம் பரப்பிய மறைத்தூதரே
மறைநெறி காத்திட்ட சவேரியாரே

வாழ்வெல்லாம் இறைவனைப் புகழ்ந்தவர் நீர்
வழியெல்லாம் அவர் கரம் பிடித்தவர் நீர் (2)
சோதனை வாழ்வினில் வென்றவர் நீர்
சாதனை எங்கும் படைத்தவர் நீர்
எங்கள் நல்போதகரே வந்தோம் உம் பாதம் தன்னில்

அன்பாய் உன் புகழ்தனைப் பாடிடுவோம்
முத்துக்குளித்துறையின் முனிவரே நீர்
தத்துவம் பல கற்ற கலைஞனும் நீர் (2)
ஆன்ம தாகத்தால் அலைந்தவர் நீர்
அணையாத ஜோதியாய் நிலைத்தவர் நீர் - எங்கள் ...

 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!