தூய பியோ | 1183-ஐந்து காய வரம் |
ஐந்து காய வரம் பெற்ற அற்புதரே எங்கள் ஆன்மாவின் ஒளியுமான தந்தை பியோவே (2) வரம் வேண்டி நாங்கள் வந்தோம் உன்னிடத்திலே அருள் வரமாகி நீ வருவாய் எம்மிடத்திலே 2 எண்ணில்லாத துன்பங்களை ஏற்றுக்கொண்டீரே இயேசுபிரான் காயங்களைத் தாங்கி நின்றீரே (2) மாசில்லாத புனித வாழ்க்கை வாழ்ந்து சென்றீரே மணம் பொழியும் காயங்களால் மனம் கவர்ந்தீரே மக்கள் மனம் கவர்ந்தீரே தீராத நோய்களெல்லாம் தீர்த்த தந்தையே தேவகுமாரன் வழியில் சென்று புதுமை செய்தீரே ஆறாத காயங்களைச் சுமந்த தந்தையே ஆன்மாவின் தளைகளை நீர் அகற்றிடுவீரே - 2 |