தூய மிக்கேல் அதிதூதர் | -மங்களம் மங்களம் சம்மிக்கேலே |
மங்களம் மங்களம் சம்மிக்கேலே மங்களம் மங்களம் சுப மங்களம் ஜெய மங்களம் தின மங்களம் மங்களம் திருவருள் நிறைந்திலங்கும் மன்னனே-2 மங்களத் தளபதி மிக்கேலேனேயே மங்களம். வாளெடுத்துப் போர்தொடுத்த வானதூதா மங்களம் வானமீதில் ஞானமோதி மாயை வென்றாய் மங்களம்-2 வாழ்வு தந்து பாலரெம்மைக் காவல் செய்தாய் மங்களம்-2 பாவிசைத்து பாடுகின்றோம் பக்தர் கூடி மங்களம் ஆண்டவர்க்கு நேரில் நின்று பேயை வென்றாய் மங்களம் ஆணவம் அகன்று மாயை ஆர்ப்பரித்தாய் மங்களம்-2 பாவ மோக மேகமாய்க்கும் பத்திராச மங்களம்-2 பாச நேசம் பாரில் ஓங்க பாதை காட்டாய் மங்களம் போரை வென்று கோலம் கொண்டு பாரில் நின்றாய் மங்களம், நேரில் நின்று பேயின் ஆட்சி வேரறுப்பாய் மங்களம்-2 பேரெழில் உரும்பராயில் வீடு கொண்டாய் மங்களம்-2 பேரருள் சுரந்து காரும் தாசரெம்மை மங்களம். |