Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய மிக்கேல் அதிதூதர் வான் சேனைக்கு  


வான் சேனைக்கு அதிபதியே
புனிதராம் மிக்கேல் அதிதூதரே
வல்லமை மிகுந்த காவலரே
எனியோர் வந்தோம் உமை நாடி

தேவசிம்மாசனம் அதன் முன்னே
மகிமையில் நிற்கும் தளபதியே
பாவ வழியில் யாம் நடந்தாலும்
கைவிடாமல் எம்மைக் காப்பீரே
கைவிடாமல் எம்மைக் காப்பீரே

இறைவனின் கரத்தை உணர்ந்து கொண்டு
சிரம் வணங்கி நீர் கீழ்ப்படிந்தீர்
ஆணவம் மிகுந்து ஆர்ப்பரித்த
லூசியின் சேனையை முறியடித்தீர்
லூசியின் சேனையை முறியடித்தீர்



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!