Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய மிக்கேல் அதிதூதர் புனித மிக்கேல் சம்மனசுக்குப் புகழ்மாலை  


புனித மிக்கேல் சம்மனசுக்குப் புகழ்மாலை


சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

தூய ஆவியாகிய சர்வேசுரா
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

புனித தமத்திருத்துவமாய் இருக்கிற ஏக சர்வேசுரா
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

புனித மரியாயே ....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

சர்வேசுவரனுடைய ஞானத்தால் நிறைந்திருக்கிறவரான புனித மிக்கேலே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

தாழ்ச்சியின் கண்ணாடியான புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

கீழ்படிதலை ஏவுகிறவரான புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

தேவ குமாரனை உத்தம நெறியில் ஆராதிக்கிறவரான புனித மிக்கேலே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

மகிமையாலும் பிரதாபத்தாலும் சூழப்பட்டவரான புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

ஆண்டவருடைய பரம சீனைக்குப் பாராக்கிரமமுள்ள படைத்தலைவரான புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

தூய தாமத்திருத்துவத்தின் விருது ஏந்தினவரான புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

மோட்ச இராச்சியத்தின் காவலரான புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

சமாதானத்தின் தூதரான புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

இஸ்ராயேல் சனத்துக்கு வழிகாட்டியும் தேற்றரவுமாகிய புனித மிக்கேலே ... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

யுத்த சபையின் கொத்தளமாகிய புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

உத்தரிக்கிற சபையின் தேற்றரவாகிய புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

மோட்ச சபையின் மகிமையும் சந்தோஷமுமாகிய புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

சம்மனசுக்களுடைய பிரகாசத் தலைவராகிய புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

விசுவாசிகளுக்குக் கோட்டையான புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

அன்னியோன்னிய பட்சத்தின் வந்தனமான புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

பதிதர்களின் எதிரொலியான புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

மரண அவஸ்த்தைப்படுகிறவர்களுடைய ஆத்துமங்களின் நம்பிக்கையான புனித மிக்கேலே ... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

நித்திய தீர்ப்பை அறிவிக்கிறவராகிய புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

சகல ஆபத்துக்களிலும் உதவி செய்கிறவராகிய புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

ஆதிமுதல் தாழ்ச்சியினாலே சர்வேசுவரனுடைய ஆதீனத்தைக் காப்பாற்றுகிறவரான புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

சம்மனசுக்களால் சங்கிக்கப்படுகிற புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

தூய ஆவியின் சாட்சியினாலே பெரியவரென்றும் பராக்கிரமமுள்ளவரென்றும் சேவிக்கப்பட்ட புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

உம்முடைய மன்றாட்டினால் எங்களை மோட்சத்தில் பிரவேசிப்பிக்கிற புனித மிக்கேலே ... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

ஆத்துமங்களின் ஈடேற்றத்தை விசாரிக்க இறைவனால் நியமிக்கப்பட்ட புனித மிக்கேலே ...  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

பிரதான தலைவர்களில் ஒருவராகவும் ,பெரிய தலைவராகவும் வேதாகமங்களில் புகழப்பட்ட புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

சர்வேசுவரனுடைய மக்களுக்கு ஆதரவாகிய புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

எங்கள் தலைவராகிய புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

எங்களை ஆதரிக்கிறவரான புனித மிக்கேலே ...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே !
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி .
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே !
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி .
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே !
எங்களைத் தயை செய்து மீட்டருளும் சுவாமி .

முதல் : எங்கள் ஆண்டவராகிய இறைவனிடத்தில் ,
துணை : புனித மிக்கேலே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

செபிப்போமாக :

சம்மனசுக்களுக்கும் மனிதர்களுக்கும் உரிய உத்தியோகங்களை ஆச்சரியமான கிராமமாய் நடத்திக்கொண்டு வருகிற நித்திய சர்வேசுவரா ! மோட்சத்திலே தேவரீருக்கு இடைவிடாமல் பணிவிடை செய்கிறவர்களாலே இப்பூலோகத்தில் எங்கள் சீவியத்தைக் காப்பாற்றும்படி தயை செய்தருளும் சுவாமி ! இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம் . ஆமென் ..





 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!