தூய மிக்கேல் அதிதூதர் | காவல் தூதர் காக்கும் |
காவல் தூதர் காக்கும் தூதர் எங்கள் மிக்கேலே எங்கள் மிக்கேலே பாதை நடந்த பயணம் முழுதும் துணையும் நீதானே விண்ணக வீட்டின் காவலரே வானவரணியின் தலைவரே கடவுள் படையின் தூதரே எங்கள் மிக்கேலே எங்கள் ஊரின் காவலரே எங்கள் மிக்கேலே மனதில் பயங்கள் மறைந்திடும் அருகில் இருக்கையிலே நீர் அருகில் இருக்கையிலே மிகவும் கணங்கள் தொலைந்திடும் நீர் கரத்தில் சுமக்கையிலே உங்கள் கரத்தில் சுமக்கையிலே கடவுள் போல யாருண்டு இவர் பெயருக்கு பொருளுண்டு இவர் தம் பெயருக்கு பொருளுண்டு உமது பெயரால் துணிந்து செய்வோம் சோதனை எதிர் கொண்டு எல்லா சோதனை எதிர் கொண்டு தீமையை எதிர்க்கும் போர்களில் வெற்றி தொடர்ந்திடுமே உமது வெற்றி தொடர்ந்திடுமே கடவுள் உம்மில் செயல்படுகின்றார் காரணம் அதுதானே உண்மைக் காரணம் அதுதானே |