தூய மிக்கேல் அதிதூதர் | எங்கள் வாழ்வில் |
எங்கள் வாழ்வில் புதுமைகள் புரியும் அன்பு புனிதரே தூய மிக்கேல் அதிதூதரே நம்பி வரும் மாந்தர்க்கு நல் ஆசீர் அளித்து இன்னருளை நிறை புனிதரே புது ........ எங்களை பாது காப்பவரே புனிதருக்கே நீர் வாழ்க சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிப்பவரே இவ்வுலக வாழ்வின் காவலும் நீரே துன்புறுவோரின் துயர் தீர்ப்பவரே எந்நாளும் இந்நாளும் எனைக் காப்பவரே நோயால் வாடுவோரின் ஆறுதல் நீரே அன்புப்புனிதரே நீர் வாழ்க அதிதூதரே நீர் வாழ்க குறையோடு வருவோரின் குறை தீர்ப்பவரே நாடி வரும் மக்களுக்கு நம்பிக்கை நீரே கலக்கம் அடைந்தோரை கரை சேர்ப்பவரே செல்லும் இடமெல்லாம் உடனிருப்பவரே எனக்காய் இறைவனிடம் பரிந்துரைப்பதும் நீரே அன்புப்புனிதரே நீர் வாழ்க அதிதூதரே நீர் வாழ்க |