Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய மிக்கேல் அதிதூதர் அதோ தூதர் அதி தூதர்  

அதோ தூதர் அதிதூதர்
இதோ தூதர் இறை தூதர்
அதோ தூதர் மிக்கெல் தூதர்
இதோ தூதர் பிரதான தூதர்
அதோ தூதர் அன்பின் தூதர்
இதோ தூதர் ஆன்மாவின் தூதர்
அதோ தூதர் .........

விண்ணிலும் விண்ணிலும் மண்ணிலும் அதிகாரம் பெற்றவர் ஆனார்
உன்னையும் உன்னையும் என்னையும் காக்கும் வல்ல தூதராம்
விண்ணிலும் விண்ணிலும் மண்ணிலும் அதிகாரம் பெற்றவர் ஆனார்
உன்னையும் உன்னையும் என்னையும் காக்கும் வல்ல தூதராம்
சாத்தானை மிதித்து உலகினை ஜெயித்து மனுக்குலம் காப்பவராம் மனுக்குலம் காப்பவராம்
பறவை நாகத்தை சங்கிலியால் கட்டி பாதாளம் சேர்த்தவராம்
பாதாளம் சேர்த்தவராம்
இன்றைக்கும் என்றைக்கும் இறைஞானம் உள்ளவராம்
தாழ்ச்சியுள்ளவரே மிக்கேல் தூதுவரே
தாழ்ச்சியுள்ளவரே மிக்கேல் தூதுவரே

மாட்சியும் புகழ்ச்சியும் நிறைந்த அதிதூதரே
உடலை உடலை ஆன்மாவை காக்கும் வல்ல தூதரே
பரலோக வாசலை பூட்டித் திறக்க அதிகாரம் பெற்றவரே
அதிகாரம் பெற்றவரே
மண்ணோரின் ஆன்மாவை விண்ணகம் சேர்க்கும் எங்கள் காவலரே எங்கள் காவலரே
நீதியின் தராசை கையில் ஏந்தி நிற்பவரே பாதுகாவலரே மிக்கேல் தூதரே பாதுகாவலரே மிக்கேல் தூதரே

வாரும் வாரும் தூதரே தாரும் இறைவனின் ஆசியே
பேய்கள் நோய்கள் கட்டுகள் உடைந்து விடுதலை கொடுக்க வாருமையா
தூதரே வாருமே தூதரே என்னில் வாருமே
இதோ இதோ மிக்கேல் தூதர்





 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!