தூய மிக்கேல் அதிதூதர் | அதிதூதர் மிக்கேலே |
அதிதூதர் மிக்கேலே எம்மைக் காத்திடும் காவலரே வான் படைகளின் தலைவன் நீயே என்றும் ஜெயித்திடும் பேரொளியே உம்மை நாடி வந்தோம் உம்மைத் தேடி வந்தோம் உம்மை பாட வந்தோம் உம்மை போற்ற வந்தோம் நன்றி கூற வந்தோம் ஒன்று கூடி வந்தோம் எம்மை காத்திட தினம் உம்மை வேண்ட வந்தோம் வான் படைகளும் இறைத்தூதர்களும் சேராபீன்களும் கூடிடுவோம் இறை மனிதர்களும் எல்லா உயிரினமும் விண் கோள்களும் தாரகையும் ஒன்றாய் கூடிடுவோம் பண் பாடிடுவோம் அதிதூதரைபோல் நாம் மாறிவிடுவோம் வாழ்ந்து மகிழ்ந்திருப்போம் அவர் அன்பில் நிலைத்திருப்போம். மண் உலகமும் ஆழ்கடல்களும் எல்லா கனி தரும் மரங்களும் பெரும் மலைகளும் எல்லா விலங்குகளும் பெரும் காற்றும் வெண்பனியும் ஒன்றாய் கூடிடுவோம் பண் பாடிடுவோம் அதிதூதரைபோல் நாம் மாறிவிடுவோம் வாழ்ந்து மகிழ்ந்திருப்போம் அவர் அன்பில் நிலைத்திருப்போம். |