தூய லொயோலா இஞ்ஞாசியார் | 1144- |
இயேசு சபையின் சுவாசக்காற்றே தேசம் போற்றும் தியாக ஊற்றே இஞ்ஞாசியார் இஞ்ஞாசியார் இயேசு சபையின் சுவசக்காற்றே தேசம் போற்றும் தீயாக ஊற்றே இஞ்ஞாசியார் ஒடுக்கப்பட்டவரின் உரிமை வாழ்விற்கே துறவியானவர் சிலுவை சுமந்திடும் இயேசு கிறிஸ்துவின் கருவியானவர் இஞ்ஞாசியார் புனித இஞ்ஞாசியார் தொலைநோக்கு பார்வை கொண்டு திட்டம் தீட்டினீர் கள்வியாலும் ஞானத்தாலும் உலகை உலுக்கினீர் மூவொரு இறைவன் மேல் பக்தியை கொண்டே புனிதமான வாழ்விற்கே உறவாகினீர் தினமும் ஜெபத்திலே அன்னை மரியிடம் பரிந்து வேண்டினீர் தேர்ந்து தெளிந்திடும் அருளின் வாழ்விற்கே வழியும் காட்டினீர் இஞ்ஞாசியார் உந்தன் பதம் நாடினோம் இஞ்ஞாசியார் உந்தன் புகழ் பாடினோம் முதன்முதலாய் பணித் துறவை புவியில் தழுவினீர் மனதை - ஆன்மிக பயிற்சியினால் தகுதியாக்கினீர் இறைவனின் ஆதி மிகு மகிமைக்காகவே உடல் பொருள் ஆவியெல்லாம் அர்ப்பணித்தீரே இயற்கை எங்கும் தந்தை இறைவனை கண்டு மகிழ்ந்தீரே இறைவன் சாயலை உயிர்கள் அனைத்திலும் காண முயன்றீரே இஞ்ஞாசியார் உந்தன் பதம் நாடினோம் இஞ்ஞாசியார் உந்தன் புகழ் பாடினோம் |