தூய தோமையார் | இனிகோ வழியில் இறையின் ஒளியில் |
இனிகோ வழியில் இறையின் ஒளியில் இணைந்தே நிற்போம் ஒளியைச் சுமந்து இருளைக் கடந்து மனங்கள் சேர்ப்போம் உலகின் புகழைத் துறந்து அன்பின் பாதையில் நடந்திடுவோம் உண்மை வழியில் நடந்து உறவின் வார்த்தையாய் விளங்கிடுவோம் நீதி சாயும்போது மனிதம் காக்க ஜோதி அணையும் போது ஒளியை ஏற்ற தொடரும் செயல்கள் எல்லாம் இன்னும் அதிகமாக எல்லாம் இறைவனின் அதிமிக அதிமிக மகிமைக்காக ஆயுதங்கள் ஏந்திவந்த இனிதே கைகளில் ஆண்டவரின் வார்த்தை வந்து இனிதே தங்கிற்று பூமி எல்லாம் ஆளவேண்டும் என்ற நெஞ்சுக்குள் தூயவரின் வார்த்தை வந்து ஒளியாய் தங்கிற்று மாற்றம் வந்தவுடனே மகிமை துறந்துவிட்டார் இறைவன் வார்த்தை வழியாய வாழும் வழியைச்சொன்னார் நீதி சாயும்போது மனிதம் காக்க ஜோதி அணையும் போது ஒளியை ஏற்ற தொடரும் செயல்கள் எல்லாம் இன்னும் அதிகமாக எல்லாம் இறைவனின் அதிமிக அதிமிக மகிமைக்காக இலட்சியத்தில் உறுதியாக நிலைத்து நின்றவர் இயேசுவபை உருவெடுக்க துணிந்து முனைந்தவர் சவேரியாரை அனுப்பிவைத்து சாட்சியானவர் இயேசு கண்ட வனவை நாளும் செயலில் ஆக்கம் செய்தார் விளிம்பில் வாழும் மனிதர் வாழ்வில் வெளிச்சம் கொண்டு வாழ்ந்தார் நீதி சாயும்போது மனிதம் காக்க ஜோதி அணையும் போது ஒளியை ஏற்ற தொடரும் செயல்கள் எல்லாம் இன்னும் அதிகமாக எல்லாம் இறைவனின் அதிமிக அதிமிக மகிமைக்காக |