தூய சந்தியாகப்பர் | -வெண்புரவி மீதேறி வெற்றிகொண்ட வீரா |
வெண்புரவி மீதேறி வெற்றிகொண்ட வீரா ஆ.. ஆ .. ஆ .. ஆ மண்ணவரெம் துயர் துடைக்க பற்றுடனே வா வா ஆ.. ஆ .. ஆ.. ஆ பல்லவி தேனூறும் தமிழாலே பாவாரம் தொடுத்தும்மை நாவாரத் துதித்தோமே யாகப்பரே - 2 அனுபல்லவி விழியும்மை நோக்குதையா பழிபோக்க கேட்குதையா வழிகாட்ட விரைந்தோடி வருவாய் ஐயா - 2 சரணம் இகவாழ்வு எனை வாட்டி மாய்க்குதையா - நல் அகவாழ்வு இருள் கண்டு தேய்க்குதையா 2 அருள்வாழ்வு எனில் ஓங்க வாருமையா -2 - இனி பெருவாழ்வை நான் காண தாருமையா - 2 இறையன்பு பெரிதென்று கண்டதனால் - நற் குறையற்ற பெற்றோரைப் பிரிந்தீரையா 2 மண்வாழ்வு சதமென்று வாழ்ந்தேனையா -2 இனி உன்வாழ்வை நான் வாழ அருளுமையா - 2 அன்பற்ற உலகினைக் கண்டேனையா - அங்கு அன்பை நான் விதைக்கவே அருள்வாயையா - 2 பண்பற்ற உலகினைக் கண்டேனையா 2 - அங்கு பண்பாய் நான் விளங்கவே வருவாயையா - 2 தொழில்வளம் செழித்தோங்க அருள்வாயையா - இங்கே எழில் மிகு கலையோங்க வருவாயையா - 2 அனைவரும் சோதரர் என எண்ணியே -2 - நீர் துணைவர நல்வாழ்வு வாழ்வோமையா |