தூய சந்தியாகப்பர் | தூய சந்தியாகப்பரே |
எங்கள் அன்பின் காவலரே சந்தியாகப்பரே எம் குரல் கேட்டு எம் குறை தீர்க்க உம்மையே வேண்டி வந்தோம் வரம் வாங்கி தாருமே எம் குறை தீர்க்க வாருமே (புது புது புதுமைகள் புரிந்தவா தினம் அருள் மழை அருகினில் புரியவா இடியவன் மகனென அறிந்தவா - உம் இடையினில் உடைவாள் அணிந்தவா திரியில் தெரியும் ஒரு வெளிச்சமாய் - தாய் மரியின் அருகில் தினம் முளைத்தவா வரங்கள் புரியும் இரு கரங்களால் அருள் சுரங்கள் தினமும் எமக்களிப்பவா சண்டியாகோ எனும் பெயர் எம் சந்தியாகப்பர் திருப்பெயர்) வெண்ணிறக் குதிரையின் வித்தகரே சந்தியாகப்பரே இறைமகன் இயேசுவின் இனியவரே சொந்தமானவரே படைகளை மிரட்டி எதிரியை விரட்டி காவல் நிற்பவரே வாளினை தீட்டி வெற்றியை நாட்டி வாழ வைப்பவரே சந்நிதி வந்தோம் எங்கள் புனித சந்தியாகப்பரே வந்தனம் தந்தோம் எங்கள் புனித சந்தியாகப்பரே சரணம் சரணம் ஈசனே சர்வம் காக்கும் நேசனே மெய்பரன் நாயகனே நற்பரன் காவலரே இயேசுவே சமர்ப்பணம் இயேசுவே சமர்ப்பணம் இறைமகன் இயேசுவின் பயணம் முழுவதும் நிழலாய் நீயும் சென்றாய் மறையா வாக்கின் விசுவாசத்தில் நிறைவாய் நீயும் நின்றாய் உலகம் முழுதும் மறையைப் பரப்ப கடலைத் தாண்டிச் சென்றாய் இறைவன் பணிக்கே உயிரைத் தந்து இரத்த சாட்சியும் ஆனாய் அன்னை வாழும் காலம் தனிலே காட்சி கண்டவரே அன்னை சொன்ன வார்த்தை தன்னை நெஞ்சில் கொண்டவரே மாதா கோவில் முதலில் கட்டிய மாட்சி கொண்டவரே அன்னையின் வாக்கின்படியே வந்து ஜீவன் தந்தவரே சந்நிதி வந்தோம் எங்கள் புனித சந்தியாகப்பரே வந்தனம் தந்தோம் எங்கள் புனித சந்தியாகப்பரே வெண்ணிறக் குதிரையின் வித்தகரே சந்தியாகப்பரே இறைமகன் இயேசுவின் இனியவரே சொந்தமானவரே அனுதின அனுதின அதிசயம் - மனம் மனம் இனிதென இனிதென ஒரு சுகம் பல பல பதிலடி பரவசம் - உம் பள பள வாளில் ஒளி வரும் திரும்பத் திரும்ப வரும் புது மழை - மனம் விரும்ப விரும்ப வரும் அருள் மழை அகல அகல மனம் அழைக்குதே உனை விலக விலக உயிர் வலிக்குதே நினைக்கவேண்டும் தினம் தினம் நீர் வழங்க வேண்டும் இறைவரம் ஸ்பெயினை இறைவன் அன்பின் நிழலில் அழகாய் கொண்டு வந்தாய் தடைகள் கோடி நெருங்கிய போதும் தலைவன் வழியில் சென்றாய் இடியின் மகனாய் வெடிக்கும் நீயும் குழந்தை போலானாய் புதுமை புரியும் புதல்வன் நீயும் நாட்டின் காவலானாய் இறைவன் அருகில் அமரும் வரத்தை வேண்டிக் கொண்டவரே இல்லை என்றே சொன்னபோதும் அண்டிச் சென்றவரே உடலின் மீது ஆலயம் கொண்ட சந்தியாகப்பரே இறைவன் அருளை பெற்றே தாரும் எங்கள் நாயகரே சந்நிதி வந்தோம் எங்கள் புனித சந்தியாகப்பரே வந்தனம் தந்தோம் எங்கள் புனித சந்தியாகப்பரே |