தூய சந்தியாகப்பர் | தூய சந்தியாகப்பரே |
தூய சந்தியாகப்பரே எங்கள் காவலரே சந்நிதி தேடி வந்தோம் சகலமும் வேண்டி நின்றோம் வாழ்க வாழ்கவே தூய சந்தியாகப்பரே வாழ்க வாழ்கவே எங்கள் காவலரே பெத்சாயிதா செபதேயு மகனாக கலிலேயாக் கடலோரம் வாழ்ந்தீரே இயேசு சொன்னவுடன் அனைத்தையும் துறந்து விட்டு துணிவோடு சீடராகச் சென்றீரே - 2 வாழ்க வாழ்கவே தூய சந்தியாகப்பரே வாழ்க வாழ்கவே எங்கள் காவலரே எப்போதும் இயேசுவோடு உடனிருந்து அவரை நிழலாகத் தொடந்தீரே நீதி நேர்மை உண்மையின் சான்றாக இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றீரே -2 வாழ்க வாழ்கவே தூய சந்தியாகப்பரே வாழ்க வாழ்கவே எங்கள் காவலரே |