தூய சந்தியாகப்பர் | 1178-புதுமைகள் கோடி புரிந்திடும் |
புதுமைகள் கோடி புரிந்திடும் எங்கள் புனித.(பெயர்) புவிவாழ் மக்கள் அனைவரும் கூடி பாடுவோம் உம் புகழை எண்ணற்ற கோடி மாந்தர்கள் உம்மை நாடி வருகின்றனர் - உம்மை நாளும் புகழ்கின்றனர் வந்தோர்க்கெல்லாம் நிறைவரம் தந்து நாளும் காக்கின்றீர் நன்மைகள் புரிகின்றீர் மெய்மறை மக்களைத் தன்வயமாக்க வஞ்சகம் செய்கிறது - உலகம் தன் வலை விரிக்கின்றது சோதனை வெல்லவும் துன்பங்கள் தாங்கவும் நல்லருள் தருகின்றீர் எங்களைக் காக்கின்றீர் |