தூய சந்தியாகப்பர் | 1177-புதுமைகள் புரிந்திடும் சந்தியாகப்பரே |
புதுமைகள் புரிந்திடும் சந்தியாகப்பரே எங்கள் புனிதரே பாதுகாவலரே உம்மை நாங்கள் போற்ற வந்தோம் உந்தன் ஆசீர் தேடி வந்தோம் கண்கள் கலங்கி கதறிடும் நேரங்களில் ஆறுதல் நீயே தந்திடுவாய் நோய்கள் பேய்கள் ஆபத்துக்கள் விபத்துக்களில் எங்களை நீயே காத்திடுவாய் தேடி வந்தோமே துணையாய் வாரும் வெண்குதிரையிலே வலமே வந்து எங்களை என்றும் காப்பவரே வாழ்வினை இழந்து வாடிடும் வேளையிலே வலிமை நீயே தந்திடுவாய் உள்ளம் உடைந்து உன்னிடம் வருகையிலே உறவாய் நீயே வந்திடுவாய் தேடி வந்தோமே துணையாய் வாரும் வெண்குதிரையிலே வலமே வந்து எங்களை என்றும் காப்பவரே |