தூய சந்தியாகப்பர் | வாருங்கள் வாருங்கள் தோழர்களே |
வாருங்கள் வாருங்கள் தோழர்களே - இந்த வையகம் வாழ்ந்திடச் செய்திடுவோம் வாழும் குடும்பத்தை திருச்சபையாகவே மாற்றியமைத்தே மகிழுவோம் மங்கை திருச்சபை மனுமகன் இயேசுவை மணமகனாய் கொண்டு உண்மையுடன் வாழ்வதைப்போல கணவன் மனைவி மாண்புடன் அன்பினில் வாழ்ந்திடுவோம் இயேசுவின் பேரன்பில் இறைமக்கள் வாழ்வதை எண்ணி நம் மக்களை அன்பு செய்வோம் எல்லோரும் போற்றிட மக்களும் பெற்றோரை இதயத்தில் வைத்து நல் அன்பு செய்வோம் அன்பின் ஒளியினில் வாழும் குடும்பமாய் ஆக்கிய சின்னமாய் சுற்றியுள்ள அயலாரை அன்பு செய்திடுவோம் - நல்ல அருளோங்கும் சமுதாயம் ஆக்கிடுவோம் அன்றைய கூட்டுக் குடும்பம் - இன்று அமைந்திட வாய்ப்பில்லை என்றாலும் இன்றும் உடையாத பாசப்பிணைப்புடன் எங்கிருந்தாலும் வாழ்ந்திடுவோம் - நாம் எங்கிருந்தாலும் வாழ்ந்திடுவோம் |