Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய சந்தியாகப்பர் தெய்வீகம் கமழ்ந்திடும் திருக்குடும்பம்  

தெய்வீகம் கமழ்ந்திடும் திருக்குடும்பம்
எங்கள் பாது காவவலானது
தினம் தினம் அதன் புகழ் பாடுவோம்
நன்றி கூறி நாளும் வாழ்த்துவோம்

நீதியும் நேர்மையும் நிறைந்தவர் சூசையப்பர்
வாய்மையும் தூய்மையும் நிறைந்தவள் கன்னி மரியாள்
தாழ்ச்சியும் சாந்தமும் நிறைந்தவர் இயேசு பிரான்
அன்பினை அமைதியை உண்மையை உழைப்பினை
ஆனது திருக்குடும்பம்

விசுவாசம் அன்பு நிறைந்த நல் குடும்பங்களால்
இறைபற்று மறைபற்று மிகுந்த நல் குடும்பங்களால்
ஜெபம் செய்து செழித்திடும் சீர் மிகு குடும்பங்களால்
எங்கள் குடும்பங்கள் வாழ்ந்திட வளர்ந்திட
அருள் செய்யும் திருக்குடும்பம்




 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!