Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய சந்தியாகப்பர் குடும்ப தீபமே மரியே  
குடும்ப தீபமே மரியே - எங்கள்
குடும்பத்தின் குலவிளக்கே
கூடி வந்தோம் தாயே - எங்கள்
குலம் வாழ வேண்டுமே


எங்கள் குடும்பத்திலே - உம்மை
விளக்காய் ஏற்றி வைத்தோம்
மங்கலம் விளங்கிடவே - நாம்
மன்றாடினோம் தாயே
பெண்களில் சிறந்தவளே - மரியே
அருள் மழை பொழிபவளே
தாயே என்றும் அமைதியிலே
எமை நாளும் காருமம்மா

அன்புப் பிறர் நலமாய் - இங்கு
கனிந்திட வேண்டுமம்மா
பண்புடன் மரியாதை - இங்கு
எல்லோர்க்கும் அறியச்செய்யும்
பெண்களில் சிறந்தவளே - மரியே
அருள் மழை பொழிபவளே
தாயே என்றும் அமைதியிலே
எமை நாளும் காருமம்மா





 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!