Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய சந்தியாகப்பர் இயேசுமரி சூசைபோல  

இயேசுமரி சூசைபோல வாழுவோம்
அந்த மாசில்லாத திருக்குடும்பம் போலவே (2)
குடும்பம் நல்ல குடும்பம் ஒரு கோயிலாகும் அன்பாலே
குடும்பம் நல்ல குடும்பம் கலைக் கழகமாகும் நல்ல பண்பாலே (2)

வார்த்தையின் வழியினிலே குழந்தைகளை வளர்ப்போம்
வாழ்க்கையில் துன்பம் வந்தால் சிலுவைதனை நினைப்போம் (2)
பார்ப்பவர் திருந்தும்படி பண்பினிலே நிலைப்போம்
பாரினில் நம்மைப் பெற்ற தூயவரை மதிப்போம் - குடும்பம் ...

இதயத்தின் எளிமையினால் இறையரசைக் காண்போம்
பிறருக்கு மனமிரங்கி பேரிரக்கம் பெறுவோம் (2)
அமைதியை நிலைநாட்டி இறைமக்களாய் வாழ்வோம்
தூயவர் நெஞ்சம் கொண்டு தூயவரைக் காண்போம்


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!