தூய சந்தியாகப்பர் | இயேசு வாழ்ந்த திருக்டும்பம் |
இயேசு வாழ்ந்த திருக்குடும்பம் இனிமையானதே அதைப் பேசும்போது இதயம் சொல்லும் உறவில் வாழுதே என்றும் மனிதரெல்லாம் மகிழ்ச்சியோடு வாழணும் எங்கள் குடும்பமெல்லாம் திருக்குடும்பமாகணும் இறைவா அருள் தருவாய் இறவா உறவருள்வாய் ஆண்டவரின் அடிமையென்று அர்ப்பணித்தார் அன்னை அன்பு அமைதி தூய்மை மலர உற்பவித்தார் தன்னை நேர்மையோடு பொருள் புகழை ஏற்றுக் கொள்வார் தன்னை பொறுமையோ கடமையாற்றி நடத்திச் செல்வார் விந்தை கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் குழந்தைகள் நசரேத்து குடும்பமாய் நல்லுறவில் வாழுவோம் பெறுவதல்ல தருவதிலே தொடங்கும் இன்ப வாழ்வு அன்பினிலும் மனங்களிலும் ஒளிரும் அதன் மாண்பு கூடி ஒன்றாய் பேசுவதால் கோடி நன்மை சேரும் குறைகளிலும் ஏற்றுக் கொண்டால் எல்லாம் இன்பமாகும் இறையுறவில் வளர்வதாலே இதயம் எல்லாம் நிறைந்திடும் இறைவனே எனத் தலைவராக புதிய உலகம் பிறந்திடும் |