Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய சந்தியாகப்பர் சேசுமரி சூசை பார் போற்றும்  

சேசுமரி சூசை பார் போற்றும் திருக்குடும்பம்
இறைவனின் திருவுளமே நிறைவேற்றும் திருக்குடும்பம் (2)
நேர்மையின் இலக்கணம் சூசை தூய்மையின் பிறப்பிடம் மரியாள்
இருவரின் மகனாய் இறைவனின் சுதனாய் உலகினில் வாழ்ந்தவர்
இயேசு - இறை வாழ்வினைத் தந்தவர் இயேசு

மண்ணோர் விண்ணோர் புகழ் ஏற்கும்
இந்நாள் எந்நாள் பார் போற்றும் (2)
பாசமும் நேசமும் நிறைந்திருக்கும்
பரிவன்புடனே வாழ்ந்திருக்கும் (2)
நன்மையின் இருப்பிடம் இறைக் குடும்பம்
முன்மாதிரியானது திருக்குடும்பம்

அன்பால் பண்பால் உறவாகும்
அஞ்சா நெஞ்சம் உயர்வேதம் -2
பக்தியின் மார்க்கம் சிறந்தோங்கும்
பரமனின் அன்பே நிலையாகும் (2)
இல்லறக் கலங்கரை இறைக் குடும்பம்
நம்மை வாழவைப்பது திருக்குடும்பம்


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!