தூய சந்தியாகப்பர் | இறைவன் வாழும் கோயில் |
இறைவன் வாழும் கோயில் எங்கள் குடும்பமாகணும் உறவுச் சூழும் குடும்பம் இங்கு உதயமாகணும் 2 உண்மை நெறி உயிரினிலே கலக்கணும் உயிர்களெல்லாம் அன்பினிலே நிலைக்கணும் எங்கள் சிறு குடும்பம் என்றும் திருக்குடும்பம்-2 துயரம் கண்டு உதவும் வாழ்வில் மரியின் அன்பு புரியும்- 2 நீதி நெறியில் வாழும் நாளில் யோசேப்பு உள்ளம் தெரியும் 2 ஞானம் நிறைந்து பணியும் குழந்தை இயேசுவாக வளரும் இறைவார்த்தை மொழியில் எங்கள் காலை அழகுடனே புலரும் மகிழ்வினிலே மலரும் இணைந்து வேண்டும் இனிய நாளில் இறைவன் ஆசி பொழியும் 2 இதயம் அன்பை சுவைக்கும் வேளை பகைமை பூசல் ஒழியும் 2 நண்பர் அயலார் இளையோர் முதியோர் உறவில் இல்லம் நிறையும் எம் இல்லம் பொங்கும் இனிய அன்பு உலகமெங்கும் விரியும் இறைவன் ஆட்சி மலரும் |