தூய சந்தியாகப்பர் | அன்புள்ள குடும்பம் ஆகலாம் |
அன்புள்ள குடும்பம் ஆகலாம் நம்மை மாற்றுவோம் அன்பான இறைவன் பாதையில் நாம் ஒன்று கூடுவோம் அன்பே ஆயுதம் பிறர் அன்பே ஆயுதம் (2) இந்த அன்பால் உலகை வெல்வோம் இறை குலமாய் மாறிடுவோம் தூய்மையான அன்பு நம்மிடையே மலர்ந்து விட்டால் போரும் பிரிவும் என்றும் நம்மை வந்து அணுகாது ஒருவரை ஒருவர் அன்பு செய்வோம் என்றும் ஒற்றுமையாயிருப்போம் இறைவனின் திட்டத்தை நிறைவேற்றி அவர் இதயத்தில் இடம் பிடிப்போம் குடும்பத்தில் அன்பை வளர்ப்போம் என்றும் கூடி நாம் செபம் செய்வோம் உலகத்து மக்கள் ஒன்றாய்ச் சேர்ந்து ஒரு குடும்பம் ஆகிடுவோம் இதைத்தான் எங்கள் இறைவன் நம்மிடையே போதனை செய்தார் கரத்தை விரித்து மரித்து - தம் அன்பை காட்டிச் சென்றார் |