Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய  பிரான்சிஸ்கு அசிசியார் இயற்கையின் நண்பனே  

இயற்கையின் நண்பனே எழுச்சி ஏந்தனே
புரட்சி புனிதனே பிரான்சிஸ்சுவே
மகிழ்ச்சியின் தூதனே மனித நேசனே
மன்னன் இயேசுவின் மரு உருவே
வாழிய வாழிய எம் புனிதா
வையகமும் செழிக்க வானவா
திருஅவயின் அமைப்பை உன்
தவத்தால் மாற்றிய பிரான்சிஸ்
பிரான்சிஸ் அசிசியே எம் பிரான்சிஸ்சுவே
பிரான்சிஸ் அசிசியே-2

அசிசி நகர் கண்ட பூபாலமே - மண்ணில்
ஆசைகள் வென்ற ஆகாயமே -2
ஏழ்மை தரித்தவா தாழ்மை தகர்த்தவா -2
இறையாட்சி யாரும் என்னில் நிறைவேற்றவா

இயற்கை அழகினில் இறையை கண்டீர் - இறையேசு
வழியினை இலக்காய் கொண்டீர் -2
உம் வாழ்க்கை வழியில் உயர்வான நெறியில் -2
எம் வாழ்வின் துணை நின்று வழிகாட்ட வா

 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!