தூய குழந்தை தெரசாள் | வானின் அருளினை பொழிபவளே- |
மலரே சிறு மலரே எம் பங்கின் பாதுகாவலியே வானில் உம் கொடி பட்டொளி வீசி பறக்குதம்மா எழில் கொஞ்சியே அருள் தாங்கியே பறக்குதம்மா வானில் பறக்குதம்மா பல்லவி: வானின் அருளினை பொழிபவளே - தூய வாழ்வினை அணியாய் அணிந்திட்ட தெரசே எம் பங்கின் காவலி ஆனவளே-என்றும் எம்மையும் ஆசிரால் நிறைப்பவளே எமதன்பே எமதுயிரே வாழ்க வாழ்க தெரசே வாழ்க உம் புகழ் வாழியவே தருக தருக உம் ஆசி தருக எம்மையும் காத்திடுவீர். சரணம் 1) உன் கொடி வானில் உயருதம்மா - எங்கள் உள்ளங்கள் உயர்ந்திட வேண்டுமம்மா -2 வெற்றியின் மகிழ்வினை காணச் செய்து வாழ்த்தியே பாடிட வரம் அருள்வீர் தெரசாளே எமக்கு வரம் அருள்வீர் வாழ்க வாழ்க தெரசே வாழ்க உம் புகழ் வாழியவே தருக தருக உம் ஆசி தருக எம்மையும் காத்திடுவீர். சரணம்- 2 உம் பதம் நாடியே வருவோர்க்கு - என்றும் உள்ளத்தில் அமைதியை மலரச் செய்வீர் தேவையில் எம்மையும் தேடி வந்து -2 தீங்கில்லா வாழ்வினை எமக்கருள்வீர் தெரசாளே எமக்கு வரம் அருள்வீர் வாழ்க வாழ்க தெரசே வாழ்க உம் புகழ் வாழியவே தருக தருக உம் ஆசி தருக எம்மையும் காத்திடுவீர். |