தூய தொன் பொஸ்கோ | -இறைவனின் தூதரே |
இறைவனின் தூதரே எங்கள் இளைஞரின் காவலரே இறையன்னை மைந்தரே எம்மில் இறையருள் பொழிவீரே உம்மில் இறை கொண்டு எம்மில் இறை கண்ட தந்தையே வாழியவே தூய தொன்போஸ்கோ வாழியவே அன்னையின் அருள் நிறைந்து ஆற்றலின் பொருள் உணர்ந்து - 2 இளையோர் நலம்பெற உனைத் தந்தாய் இறை ஒளி நீயானாய் எம் இளையோர் நலம்பெற உனைத் தந்தாய் இறை ஒளி நீயானாய் இளையோர் வழி நீயானாய் உம்மில் இறை கொண்டு எம்மில் இறை கண்ட தந்தையே வாழியவே தூய தொன்போஸ்கோ வாழியவே நினைவுகள் நிதம் நிலைக்க கனவுகள் நனவாக - 2 நிறைவினைத் தந்து நிஜ வாழ்வில் நிஜங்களை உணர செய்தாய் மன நிறைவினைத் தந்து நிஜ வாழ்வில் நிஜங்களை உணர செய்தாய் - வாழ்வில் உம்மில் இறை கொண்டு எம்மில் இறை கண்ட தந்தையே வாழியவே தூய தொன்போஸ்கோ வாழியவே |