Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய தொன் பொஸ்கோ -ஆர்த்தெழுந்து வருவோம்  

ஆர்த்தெழுந்து வருவோம்
அணிதிரண்டு போற்றுவோம்
தந்தை போஸ்கோ நாமத்தை
தரணி எங்கும் சாற்றுவோம் - 2
வருகிறார் டோன் போஸ்கோ
நம்மை காண வருகிறார்
வாருங்கள் கொண்டாடுவோம் நல்லாசி தருகிறார்

அவரைக் காணும் பேறு அரிய பெரிய வரமே
அயராது இளையோர்க்கு உளைக்க துணிந்த கரமே -2
அனுதினம் எளியோரை ஆதரித்த நெஞ்சம்-2
அவர் தம் உள்ளம் தானே இளைஞருக்கு தஞ்சம்
பிறருக்காக அண்ணல் வாழ்ந்த வாழ்வு நமக்கு பாடம்
அரிய உள்ளம் கொண்டவர்க்கு நலன்கள் யாவும் கூடும்

இளைஞர் கோடி இங்கே ஆற்றல் வளமும் இங்கே
இறையாட்சி நனவாக்கும் எதிர்காலம் இங்கே-2
வாலிபர் வாழ்வினையே ஒளிர வைத்த முதல்வன்-2
வளமுடன் வழிநடத்த இறைவன் தந்த தலைவன்
அன்பு பக்தி அறிவு என்று அரவணைத்த தந்தை
அண்ணல் போஸ்கோ எனும் கீதம் அகிலம் காணும் விந்தை




 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!