Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய தொன் பொஸ்கோ வருக வருக டொன்பொஸ்கோ  
வாழ்க டொன்பொஸ்கோ வருக டொன்பொஸ்கோ

வருக வருக டொன்பொஸ்கோ வருக வருக
வாழ்க வாழ்க டொன்பொஸ்கோ வாழ்க வாழ்க
வருக வருக டொன்பொஸ்கோ வருக வருக
உம் திருத்தலத்தால் இறையாசி வழங்க வருக

வருக வருக டொன்பொஸ்கோ
வாழ்க வாழ்க டொன்பொஸ்கோ
வருக வருக ஆசி தருக டொன்பொஸ்கோ

இறைவன் தந்த இனியவரே டொன்பொஸ்கோ
இறையன்பின் தூதுவனே டொன்பொஸ்கோ
மரியன்னை பக்தன் நீரே மகிழ்வாகக் கொண்ட நீரே
எங்கள் இல்லம் தங்க வாரும் டொன்பொஸ்கோ- இன்று
உந்தன் ஆசீர் பொழிய வாரும் டொன்பொஸ்கோ

இளைஞர் போற்றும் தந்தை நீரே டொன்பொஸ்கோ
இளைஞர் உலகின் தலைவர் நீரே டொன்பொஸ்கோ
அன்பான சேவை செய்து கனிவான கருணை தந்து
வளமான வாழ்வு வழங்கும் டொன்பொஸ்கோ - நல்ல
வழிகாட்டியாக நிற்கும் டொன்பொஸ்கோ

உம்மை வாழ்த்திப் பாடுவோம் டொன்பொஸ்கோ
இறைவனையே புகழ்ந்திடுவோம் டொன்பொஸ்கோ
உனைச் சூழ்ந்து கூடுவோம் கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
உனைப்போன்று வாழ்ந்திடுவோம் டொன்பொஸ்கோ - என்றும்
உன் பணியைத் தொடர்ந்திடுவோம் டொன்பொஸ்கோ





 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!