தூய தொன் பொஸ்கோ | நன்றி சொல்லுவோம் |
நன்றி சொல்லுவோம் நாங்கள் நன்றி சொல்லுவோம் நாதனே உமைப் புகழ்ந்து நன்றி சொல்லுவோம் -2 (2) அண்ணல் எங்கள் தொன்போஸ்கோ மண்ணில் பிறந்தார் உந்தன் அன்பர் என்றும் அற்புதமாய் கண்ணில் நிறைந்தார் (2) இனிய உந்தன் அருள் மழையில் நீராட்டினார் அவர் இளையவர்க்கு வானகத்தின் வழிகாட்டினார் (2) -2 மானுடத்தின் மாண்புகளைப் பேணி நடந்தார் அவர் மாறிவரும் காலமதின் சூழல் அறிந்தார் எளியவராய் காட்சி தந்து தூய மலராய் இங்கு என்றும் உமது சாட்சியாகி புனிதராகினார் (2) -2 |