Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய தொன் பொஸ்கோ இளைஞன் நீ  

இளைஞன் நீ.......
அது போதும் எனக்கு உன்னை அன்பு செய்திட
இறைவனின் அன்பை உலகிற்கு காட்டிட
தந்தை போஸ்கோ மந்திரம்
போஸ்கோ என்னும் நாமம்
போக்கிடும் இளைஞரின் சோகம்
விதைத்திடும் விடுதலை தாகம்
நம்மில் என்றும் தந்திடும் வேகம் - 2

அன்பே அறியா உள்ளங்கள் நடுவே
அமுதாய் திகழ்ந்தவர் நீரே
ஏழை எளியவர் நெஞ்சங்கள் உள்ளே
என்றும் நிறைந்தவர் நீரே - 2
அன்பு கரம் கொண்டு அணைக்கின்ற இதயம்
இன்றும் என்றும் வாழும் - 2
பார் போற்றும் எம் அண்ணல்
நீர் மனிதருள் மாணிக்கமே
உன் பாதை என் வாழ்வில இனி வழி தரும் ஒளி விளக்கே

வீதியில் அலைந்திடும் இளைஞனை கண்டு
இறங்கிய உள்ளம் நீரே
சேதியைச் சொல்லி வாழ்வினை
மாற்றிய சேவை செம்மலும் நீரே - 2
கல்வி புரட்சிக் கண்டு காலத்தை வென்றவர்
இளைஞருக்கெல்லாம் ஆசான் - 2
இறைவாழ்வு அன்பு பாசம்
பகுத்தறிவினை ஊட்டி வைத்தார்
உம் இலக்கே என் வேட்கை நீர் வாழிய வாழியவே




 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!