Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய தொன் பொஸ்கோ என் நண்பன் இனிய நண்பன்  
என் நண்பன் இனிய நண்பன் நீ தான் பொஸ்கோ
என் சொந்தம் இனிய சொந்தம் நீ தான் பொஸ்கோ
உம் பிள்ளைகள் கூடியுள்ளோம் - யாம்
உம் புகழ் பாடி நின்றோம்

வீதியில் வாழ்ந்த எம்மை வீட்டுக்குள் அழைத்தாய் ஏனோ
விடியல் தந்தாய் ஏனோ
நாதியின்றி இருந்தோம் நல்வாழ்வு ஒன்றை இணத்தாய்
இனிய வரவு தந்தாய்

ஆலமரம்போல் நாளும் உன் அன்பெனும் விழுதுகள் தானோ
இன்று அகிலத்தில் உன் பெயர் தானோ
நீ பிறந்த மண்ணின் வாசம் எங்கள் மனதில் என்றும் நேசம்
என்றும் யாவுமானாய்






 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!