Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய தொன் பொஸ்கோ 1178- பெக்கி நகரின் எங்கள்  

பெக்கி நகரின் எங்கள் அன்புத் தந்தையே
இளைஞர் மனம் வென்ற தொன்போஸ்கோவே (2)
அருள்வழியின் தந்தை நீரே -2
இளம் இதயம் மகிழ வந்த ஒளியே

எளியோரின் வாழ்வினிலே இன்ப ஒளியாக நீயாகினாய்
இளைஞரெல்லாம் கண்ணுறங்க
என்றும் விழித்திடும் தாயகினாய் (2)
இறையருள் வாய்க்காலாய் எழுந்த எம் போஸ்கோ -2
இளையோர் இருளகற்றும் ஒளிவிளக்கே

புவியோரின் சோகமெல்லாம் அன்புத் தாயன்பால் நீங்கிடுமே
வன்னெறியில் கல்விமுறை
என்றும் தவிர்த்திடவேண்டும் என்றீர் (2)
புதுவழி நீ கண்டாய் புவியில் எம் போஸ்கோ -2
அன்பின் வழிநடக்க பணித்தவரே


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!