Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய தொன் பொஸ்கோ 1179-இறைவனில் இணைந்த  


இறைவனில் இணைந்த நல் புனிதரே
இளைஞரில் மகிழ்ந்த நல் அன்பரே
தூயமா மரியன்னை மைந்தரே - எங்கள்
அண்ணல் டொன் பொஸ்கோ வாழ்கவே

வாழ்க எம் தந்தையே...
இளைஞரின் காவலரே..
வாழ்க எம் தந்தையே - எம்மில்
உமதருள் பொழிவீரே

இளைஞரின் இதயத்தில் ஆற்றலைப் படைத்தீரே
வளர்கின்ற மனிதன் செயலுற வருவீரே
தளர்ந்திடும் பயிர்கள் தழைத்திட தினமும்
மலரும் ஆசிகள் பொழிவீரே

கடவுளின் சிசுவை வீதியில் எடுத்தீரே
உடையினை உடுத்தி உணவையும் கொடுத்தீரே
உறைவிடம் கொடுத்து படிப்பையும் வழங்கி
இறைவன் ஆசியைப் பொழிந்தீரே




 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!