தூய செசிலியம்மாள் | தூய செசீலியாவின் புகழ் பாடுவோம் |
தூய செசீலியாவின் புகழ் பாடுவோம் - அவள் தூய்மையினை நாளும் நாளும் பாடி மகிழ்வோம் இசையினாலே இறைவனைப் புகழ்ந்தே இசைக் கலைஞர் காவலாளி நீ - இசை பாடி போற்றிப்புகழ்வோம் என்றும் உம்மையே ரோமையில் நீர் பிறந்தீர் தூய்மையில் நீர் வளர்ந்தீர் கன்னிமையில் சிறந்தோங்கினீர் இசையினால் இறைவனைப் புகழ்ந்திட எண்ணம் கொண்டீர் இசையின் அரசியே எளிமையின் அழகே எமக்காக மன்றாடம்மா இல்லறத்தில் வாழ்ந்தாலும் நல்லவராம் இயேசுவை உள்ளமதில் உயர்த்தி வைத்தீர் வல்லவராம் இயேசுவுக்காய் ரத்தம் சிந்த சித்தம் கொண்டீர் இறைவன் வழியாய் இசையில் ஒளியாய் எமக்காக மன்றாடம்மா |