தூய செசிலியம்மாள் | தூய சிசிலியை போற்றிப் பாடிடுவோம் |
இசையின் அரசியே போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் எங்களின் காவலியே தூய சிசிலியை போற்றிப் பாடிடுவோம் இசையின் அரசியை புகழ்ந்து பாடுவோம் என்றென்றும் அவர் வாழ்கவே அம்மா அம்மா செசிலியா அம்மா எனைக்காக்கும் தாயே அம்மா புகழ்ந்து போற்றிடுவோம் இன்னிசை பாடிடுவோம் எந்நாளும் துதித்திடுவோம் கானக்குயில் போல வந்து கடவுளின் இசைபாடி திருப்பாடல் யாவையுமே சிறந்தோம் பாடி நின்று அவள் எங்கள் காவலியே நெஞ்சம் மகிழ்ந்து அவரைப் புகழ்ந்து என்றும் பாடிடுவோம் புகழ்ந்து போற்றிடுவோம் இன்னிசை பாடிடுவோம் எந்நாளும் துதித்திடுவோம் ஆண்டுகள் கோடி கடந்திட்ட போதினிலே திருவுடல் அழியாத பாக்கியம் பெற்றவளாய் உன் புகழ் சாற்றிடவே துயரங்கள் பல சுமந்தாய் இவள் எங்கள் தாயல்லவா துன்பம் களைந்து துயரம் மறந்து பரமன் பணிபுரிவோம் புகழ்ந்து போற்றிடுவோம் இன்னிசை பாடிடுவோம் எந்நாளும் துதித்திடுவோம் |