தூய செசிலியம்மாள் | மாசில்லா புனித சிசிலியா |
மாசில்லா புனித சிசிலியா - உன் இதயம் வாழ்ந்தது இசையிலா (இசையிலா) ஆசையாய் வந்தோம் சிசிலியா - எம் இசையே உந்தன் திசையிலா (திசையிலா) இசையின் திசையாய் இருந்தவளே அசையும் இசையாய் வாழ்ந்தவளே பாடி மகிழ்வோம் உன்னையே ஏழு ஸ்வரங்களின் அன்னையே இறைவா உம்மை புகழ்கையிலே எந்தன் நாவும் அக்களிக்கும் உமக்காய் பாடல் இசைக்கையிலே எந்தன் ஆன்மா அகமகிழும் வரங்களைக் கரங்களில் எடுத்தவளே சுரங்களைத் தரமெனக் கொடுத்தவளே பாடலின் மௌனமாய் நடந்தவளே மௌனத்தை பாடலாய் கொடுத்தவளே போற்றிட வந்தோம் புனிதையே ஏற்றிட தந்தோம் மனதையே புனிதை உம்மை நினைக்கையிலே புதிதாய் பாடல் பிறந்துவரும் உமது வாழ்வை நினைக்கையிலே மனதில் தூய்மை மலர்ந்து வரும் இசை உயர நின்றவளே எனக்காய் உயிரைத் தந்தவளே தேவனே துணையெனத் தந்தவளே துணைவரை தேவனே தந்தவரே போற்றிட வந்தோம் புனிதையே ஏற்றிட தந்தோம் மனதையே |