Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய செசிலியம்மாள் இன்னிசை பாடி இறைவனை  
இன்னிசை பாடி இறைவனைப் போற்றும் தூய மலரே
இசை வழியாலே இதயம் புகழும் சிசிலியம்மாளே

நாங்கள் உம்மை வாழ்த்தி நாளெல்லாம் பாடுவோம்
தினம் உம்மைப் போற்றி புனிதத்தைப் போற்றுவோம்
இதயம் மகிழ்வாய் இசையில் பாடி ஒன்றாய் மகிழுவோம்

பாடகரின் காவல் நீ பண்ணிசைக்கும் சீலி நீ
பாடும் வரம் தந்தே எம்மை பாடவைக்கும் தாரகை நீ
எங்கள் இசையின் காவல் நீ எங்கள் பாதையின் விளக்கும் நீ
பாடகரின் காவல் நீ பண்ணிசைக்கும் சீலி நீ
பாடும் வரம் தந்தே எம்மை பாடவைக்கும் தாரகை நீ
தேனிசையால் பாக்கள் தூவி வானதூதர்கள் பண்பாடி
ஞான மழையிலே இதயம் நாடி
தேவனே மீட்கும் யாழிலே நீயும் இசையானாய்

வான்தூதர் உம் இசையில் பாடிடுவர் புவி வந்தே
வழிநடத்தும் எம்மை நீயே உம் பாடல் இசையாலே
எங்கள் பெயரின் இராக்கினி எங்கள் மனதின் புனிதம் நீ
வான்தூதர் உம் இசையில் பாடிடுவர் புவி வந்தே
வழிநடத்தும் எம்மை நீயே உம் பாடல் இசையாலே
துறவறமாய் வாழ்வைத் தேடி மறை பணியில் விதையாகி
மடியும் வரையில் மெழுகாய்  உருகி
திருச்சபை போற்றும் சரித்திரம் படைத்த சிசிலியே






 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!