Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய செசிலியம்மாள் 1189-இசை என்னும் அமுதை  
இசை என்னும் அமுதை
இறைவனுக்கே என்றும்
சுவை தந்த செசீலியே
பாடகர் அனைவரின் காவலியே !
இசை என்னும் அமுதை இறைவனுக்கே


பாடுவோம் இன்று பாடிடுவோம்
தேடுவோம் உம்மை நாடிடுவோம்

தேனினுமினிய தமிழிசையாலே
தினமுமைப் புகழ்வோமே
தேவனை நாளும் புகழ்ந்து யாம் பாட
தேடும் உன் அருள் தாராய் - எமக்கு
தேடும் உன் அருள் தாராய்


பாடகர் அனைவரின் காவலி நீயே !
பாடிடுவோம் தினமே
பாடலினாலே மறைபணி புரிய
பரமனிடம் வேண்டுவாய் - எமக்காய்
பரமனிடம் வேண்டுவாய்

பண்பல இசைத்தே பார்தனில் நாங்கள்
பணிந்திட்டோம் அருள் பெறவே
இறைபுகழ் பாடி இகமதில் நாளும்
வாழ்;ந்திடும் வரம் தாராய் - எமக்கு
வாழ்;ந்திடும் வரம் தாராய்



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!