தூய செசிலியம்மாள் | -பாடகரின் காவலியே |
பாடகரின் காவலியே புனித செசிலியே உமது புகழை பாட வந்தோமே உமது புனிதம் கொண்டாடும் இந்நாளிலே உமது பெருமை பாடி நின்றோமே வாழ்த்துகின்றோம் புனித செசிலியே வாழ்க வாழ்க என்றும் வாழ்கவே போற்றுகின்றோம் உமது பணியையே என்றும் உந்தன் புகழை பாடியே ஏழு ஸ்வரங்கள் மீட்டியே தினமும் தேவனை ஏற்றி புகழ்ந்த உம்மிலே மனமும் மகிழுதே துன்ப துயரம் வாழ்விலே மிகுந்த போதிலும் தூய்மை நிறைந்த உம்மையே மனமும் புகழுதே சோர்ந்து போகும் தருணங்களில் உம்மை போலவே தேர்ந்து பாடும் மனதை எமக்கு தந்தருள்வாயே தேவை மிகுந்து தேவனின் புனித பாதமே தேடி அமரும் மக்களும் இணைந்து துதிக்கவே புத்தம் புதிய கீதங்கள் இசைக்க வேண்டுமே பூமி முழுதும் நன்மையால் நிறைய வேண்டுமே வாழ்வு யாவும் இறை புகழை உம்மை போலவே வாழ்த்தி பாடும் அருளை எமக்கு தந்திடுவாயே |