தூய செசிலியம்மாள் | -இறை இசை புனிதையே |
இறை இசை புனிதையே இறைவனின் கீதமே எங்களின் புனித செசிலியாவே கற்பிலும், நட்பிலும், உறவிலும் வாழ்விலும் இயேசுவிற்காகவே வாழ்ந்தவளே என்னோடு இருப்பவர் பெரியவரே அவரே உலகின் ஒளி என்னோடு இருப்பவர் பெரியவரே அவரே உண்மையின் இறைவன் -2 என் இயேசுவே அன்பின் தலைவன் - நான் அவரையே மகிழ்ந்து பாடுவேன் - என்ற வேதனையில் சோதனையில் ஆண்டவரை போற்றினீர் தனிமையினில் தவிப்புக்களில் ஆண்டவரை போற்றினீர் மரணத்தினில் பாடுகளில் ஆண்டவரை போற்றினீர் திருப்பலியில் இறைவேண்டலில்ஆண்டவரை போற்றினீர் இறைவனின் மகிமையினை புகழ் இசை பாக்களால் சாற்றினீர் கரங்களை விரித்து கண்ணீரோடு ஆண்டவரைப் போற்றினீர் தூய்மையில் நிலைத்து வாழும்படி ஆண்டவரைப் போற்றினீர் புலன்களை அடக்கி சுயநலம் மறுத்து ஆண்டவரைப் போற்றினீர் திருவருட் சாதன மகிமையை பரப்பி ஆண்டவரைப் போற்றினீர் இறைவனின் மகிமையினை புகழ் இசை பாக்களால் சாற்றினீர் |