தூய அருளானந்தர் | 1161-சுடர்விடும் திருமறை தீபமே |
சுடர்விடும் திருமறை தீபமே
சுந்தரனே மறைசாட்சியே புகழுகின்றோம் போற்றுகின்றோம் அருளானந்தா -2 (2) போர்த்துக்கல் நாட்டில் பிறந்தவரே அரண்மனைச் சூழலில் வளர்ந்தவரே மறைப்பணி ஆர்வம் நிறைந்ததனால் எங்களின் தாயகம் வந்தவரே சேசுசபை குருவாகி பணி புரிந்தாய் காவியுடை அணிந்தே தமிழ்த் துறவியானாய் பயணங்கள் தொடர்ந்த பாதையெல்லாம் திருமறைச் சுடர்கள் ஏற்றி வைத்தாய் புதுமைகள் செய்த பகைவரையும் மன்னித்து அன்பினை ஊட்டி விட்டாய் உன் உறவில் தமிழ் மண்ணும் தேன்கூடு உன் பிரிவில் சிவந்த மண்ணும் அருள்வீடு |