Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய அருளானந்தர் 1160-இன்னுயிர் நீ தந்தாய் புனிதரே  
இன்னுயிர் நீ தந்தாய் புனிதரே
என்னுயிர் நீயானாய் தலைவரே
பாடுவோம் புகழுவோம் என்றுமே - 2 (2)

பாலைவனத்தில் நீயோர் கூக்குரல் பரமன் முன்னோடியானது
அருளானந்தரின் கூக்குரல் அநேக வாழ்வுகளைச் சாடியது
இறைஇயேசுவின் வழிசெல்லுவோம் நாமும் மறைசாட்சியாவோம்
அருளானந்தர் புகழ்பாடுவோம் வேதம் பறைசாற்றி வாழ்வோம்
திருமறை ஆட்சியைக் காண்போம்


இறைமக்கள் பாதையைச் சீர்செய்ய
ஸ்நாபகர் போதனை செய்து வந்தார்
தம் மக்கள் வாழ்வினை உயர்த்திட
அருளானந்தரே உழைத்து வந்தார்
இறை இயேசுவின் முன்னோடியாய் நாமும் வாழ்ந்திடுவோம்
வழிசெய்வோம் அருளானந்தர் வழிகாட்டிட நேர்மை
நீதிவழி நடந்திடுவோம் உண்மைக்குச் சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!