தூய அருளானந்தர் | 1159-அருளைப் பொழியும் |
அருளைப் பொழியும் புதுமலரே அருள் ஆனந்தமே அருள் வழியே (2) காக்கும் புனிதரே கருணை வெள்ளமே கவலை போக்கிடும் மருந்தே தேவமைந்தனின் வார்த்தை அமுதினில் தேனிலே குழைத்துத் தந்தாய் - ஞானத் தேரிலே அழைத்துச் சென்றாய் - இயேசு தேவனை அடையச் செய்தாய் (2) பாவம் ஓடியது அங்கே தெய்வ பக்தி கூடியது இங்கே இருளில் வாழ்பவர்க்கு ஒளியைத் தந்தவரே இதயம் வாழும் ஒளிச்சுடரே அன்பு தீபமே வா உன் அணைப்பில் மகிழுவோம் வா -2 ஆசை கோபமெனும் மாசு துடைக்கவும் அன்பை விதைக்கவும் வந்தாய் - இயேசு அண்ணலின் வழியைக் கொண்டாய் - உன் நாவிலே தவழ்ந்து நின்றாய் (2) மறையைக் காக்க வந்த திருவே - எங்கள் மனதைக் காக்க வந்த கனியே ஒருவன் வாழத் துணை ஒருத்தி போதும் என்ற உயர்நெறி காட்டிய அருளே |