Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய அந்தோனியார் தென்றல் பாடுதையா  
தென்றல் பாடுதையா பூந்தென்றல் பாடுதையா 2
சந்தந்தோனி கமல பாதம் சந்ததமும் தஞ்சமென தென்றல்

கோடித்தவம் செய்யும் நாவழியாமுனி
வாடி மெலிந்தோர்க்கு வான் மழையாரினி 2
பாடிப் பணிந்திட ஓடி வந்தோம் ஐயா
வரம் அருள்வீர் சுகம் அருள்வீர்
வேண்டிடுவோர்க்கு அருள் தருவீர்

நோய் பிணி தீர்த்திடும் நாயகன் அந்தோனி
பேய்களை ஓட்டிடும் தூயவன் அந்தோனி 2
தாயகச் சேயர் நின் தாளினைக் கும்பிட்டோம்
நிறை மகனே திருமகனே
குறையகற்றும் பெருமகனே

பதுவைப்பதியின் தலைவன் இவன்
புதுமைக்குரு முதல்வன் என தென்றல்







 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!