Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய அந்தோனியார் அந்தோனியார் புகழ் பாடி  

அந்தோனியார் புகழ் பாடி - அவர்
அன்பின் அடைக்கலம் தேடி
இன்னல் துயர் போக்க எண்ணிலா நோய் நீங்க
இன்பக் களிப்போடு கூடி
அவர் செய்யும் புதுமைகள் கோடி

பொல்லாத நோய் பிணியாலே
இங்கு சொலொணாத் துன்பத்தினாலே
இல்லாத துறை ஒன்றினாலே - குற்றம்
எல்லாம் நிறைந்ததனாலே
ஆதரவாய் உம்மை அன்பிலே நண்பரை
ஆறுதல் தந்திடுவீரே - எந்தன்
ஆபத்தில் வந்திடுவீரே

எண்ணற்ற தாபங்களாலே - என்
எண்ணத்தின் பாவங்களாலே
முன்னுற்ற மோகத்தினாலே - என்
முற்னேற்ற வேகத்தினாலே
ஆதரவாய் உம்மை அன்பிலே நண்பரை
ஆறுதல் தந்திடுவீரே - எந்தன்
ஆபத்தில் வந்திடுவீரே


தணியாத தாகத்தினாலே - நான்
தனியாகத் தவித்தனாலே
துன்பங்கள் தொடர்ந்ததனாலே - நான்
துணிவின்றித் துவண்டதனாலே
ஆதரவாய் உம்மை அன்பிலே நண்பரை
ஆறுதல் தந்திடுவீரே - எந்தன்
ஆபத்தில் வந்திடுவீரே

 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!