தூய அந்தோனியார் | அன்புத் தந்தையே கருணை தெய்வமே |
அன்புத் தந்தையே கருணை தெய்வமே எங்கள் அந்தோணியாரே புனித நகரிலே புதுமை புரிந்திடும் பதுவைப் புனிதரே வாழ்க வாழ்க வாழ்க வண்ணத் திருவடி புனிதர் பூவடி வாழ்க பணியில் வாழ்வும் பகிர்வில் நிறைவும் வரவும் உம் வரவால் தணியும் நோய்கள் தகரும் பிணிகள் தலைவா உன் தயவால் தவிக்கும் உள்ளம் தனை உயர்த்த தர்மம் தான் என்றாய் உரிமை வாழ்வை உலகிற்கு உயர்த்த புனித நகரிலே இறைவன் ஒளியில் நாங்கள் செல்ல வழியைச் சொன்னவரே இறை நல்வாழ்வில் நிதமும் வாழப் பாதை தந்தவரே எந்தன் நெஞ்சில் நீ இருந்து உண்மை நெறி செல்ல இறைவன் வாக்கை வாழ்ந்து காட்ட புனித நகரிலே |