தூய அந்தோனியார் | வந்தனம் கூறி வணங்கும் |
வந்தனம் கூறி வணங்கும் சொந்தம் சந்தணம் போல மணக்கும் நெஞ்சம் உன்பதம் கூடும் நாளில் புனிதரே முன்பனிபோல விலகும் துன்பம் வெண்மதிபோல வளரும் இன்பம் உன்வரம் தேடும் வாழ்வில் புனிதரே அந்தோனி மாமுனியே நன்றாகும் வாழ்வினிலே உன்பெயரை நாவினிக்கப் பாடுவது என்பணியே சொல்லில் இனிமை நெஞசில் வலிமை உந்தன் எளிமை போற்றினோம் வையம் முழுதும் வந்து மலரும் வல்ல செயல்கள் போற்றினோம் வழுவில்லாத இறைவன் வார்த்தை தாங்கினாய் என்றும் அளிவில்லாது நாவைக்காக்க ஏங்கினாய் சிந்தை முழுதும் அன்பின் விழுது விந்தை செயல்கள் ஆற்றினாய் செல்வம் இழந்து உன்னை அடைந்தோர் நொந்த இதயம் தேற்றினாய் மழலை தெய்வம் மடியில் ஏந்தும் அண்ணலே உந்தன் நிழலைத் தேட தீரும் எங்கள் இன்னலே |