Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய அந்தோனியார் வணக்கம் வணக்கம் கோடியற்புதரே  

வணக்கம் வணக்கம் கோடியற்புதரே
வணக்கம் வணக்கம் அந்தோனியாரே!

கோடியற்புதரென்று ஒருதரம் சொன்னால்
ஓடிமறைந்திடும் துன்பமெல்லாம்
தஞ்சமென்றண்டினோம் தயவுடன் காரும்
அஞ்சலென்றே அன்பின் அருள்கூரும்

காற்றிடைக் கலமெனக் கலங்கிடும் வாழ்வில்
கலங்கரை விளக்கமே கரைசேரும்
இல்லறம் துறவறம் இருதிறத்தாரும்
நல்லறம் புரிந்திட வரம் தாரும்

பதுவையில் வளந்தாய் (நகர்பெயர்) உறைந்தாய்
புதுமையிற் சிறந்தனை தவமுனியே
தூய நல்வாழ்வோடு நேர்மை சேர் வாய்மை
ஆயநற்கலை கல்வி துணை வேண்டும்

ஆலயமணியில் நின் அழைப்பினைக் கேட்போம்
ஆவலோடண்டினோம் அரவணைப்பீர்
ஊர்வளம் செழித்திட வேண்டும்
தேரில் வரும் தூயோய் தரவேண்டும்

 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!