தூய அந்தோனியார் | தெரியப்பட்டு திருத்தலத்திலே |
தெரியப்பட்டு திருத்தலத்திலே பெருமையுடன் நிலை கொண்டவரே அந்தோனியாரே அருட் காவலரே கோடி அற்புதரென போதகரே வந்தனமே வந்தனமே நாவழியாப் புனிதரே உன் பதமே உன் பதமே நாம் சூழ்ந்து வந்தோமே லிஸ்பன் நகரிலே உதித்தவரே பதுவைப் பதியராய் உயர்ந்தவரே தெரியப்பட்டு வனத்தினிலே வெள்ளை லீலி மலரென திகழ்ந்தவரே தேடிவந்தோம் பாடிநின்றோம் தேன் தமிழினிலே தேவனடி சேருமென்னை ஜீவநதியே குழந்தை இயேசுவைக் கரங்களிலே மகிழ்வோடேந்திய மாதவனே வளமும் நலமும் வாழ்வினிலே - நிதம் வளர்ந்து ஓங்கிட துணையருளும் மீண்டும் எங்கள் குறைகள் தீர்ப்பாய் பாலதேவனே தேவனடியில் நிறைவு காண்போம் பூவுலகிலே |